இந்த மாதம் மன் கீ பாத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா?

அடுத்த தலைமுறையினருக்காக ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் என பாரத பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரைநிகழ்த்தினார். 

Last Updated : Apr 29, 2018, 01:17 PM IST
இந்த மாதம் மன் கீ பாத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா? title=

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் வானொலி உரை நிகழ்ச்சி 43-வது மாதமாக இன்று ஒலிபரப்பாகிறது. ஏப்ரல் மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்துள்ள நிலையில் இன்று பிரதமர் என்ன பேசயிருக்கிறார் என்று ஆவலுடன் இருந்தனர். 

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் 43-வது மாதமாக இன்று நடைபெற்றது. 

பிரதமர் மோடி மன் கீ பாத்-ல் பேசியதாவது...! 

நீரை சேமிக்க ஒவ்வொருவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும், மேலும் அவர் அடுத்த தலைமுறைக்காக ஒவ்வொரு சொட்டு நீரையும்  சேமிப்பது முக்கியம் எனக்கூறினார். மேலும், நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக மத்திய அரசு சராசரியாக சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டியில் வெற்றிவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். இவர்களின் வெற்றியானது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உடற்பயிற்சி குறித்து அவருக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளதாகவும், அது அவருக்கு பெருமியளிப்பதாகவும் தெரிவித்தார். அனைவரும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடற்பயிற்சி செய்யவேண்டும் எனவும் வலியுருத்தியுளார். பின்னர், சுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் முழுமையாக அளிப்போம். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு அளிக்கும் பயிற்சியில் இணைய வேண்டும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

Trending News