Defence Expo 2018: திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்த பிரதமர் மோடி.!

திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி தற்போது திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்தார்.

Last Updated : Apr 12, 2018, 11:42 AM IST
Defence Expo 2018: திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்த பிரதமர் மோடி.! title=

11:41 12-04-2018

விழாவில் முடிவில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.  


11:35 12-04-2018

சிறிய அளவில் தொடங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. 
  
ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கியது நமக்கு பெருமை. 

தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்கள் அமைய உள்ளது.

அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


11:13 12-04-2018

மற்ற நாடுகளை பிடிக்க இந்தியா ஆசைப்பட்டது இல்லை என்று ராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் மோடி கூறினார்.

நாட்டின் அமைதிக்காக இந்திய ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர் என்றார்.


11:08 12-04-2018

விழாவில் "காலை வணக்கம்" என தமிழில் கூறி பேச்சை தொடங்கினார் பிரதமர் மோடி!

இந்தியா முதல்முறையாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது என்றார்.


11:00 12-04-2018

திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார். 


10:31 12-04-2018

திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

ராணுவ தளவாட கண்காட்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் `தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி. இந்தக் கண்காட்சி பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும். 

இந்த ராணுவ தளவாடக் கண்காட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. தமிழகம், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தைக் கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறைகளுக்கான திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது' என்றார்.


10:25 12-04-2018

திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.


10:23 12-04-2018

திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.


10:13 12-04-2018

ராணுவ கண்காட்சி விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

 


பிரதமருக்கு ஆளுநர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு.

 

 


சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர், உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். 

 

 

இதையடுத்து, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர். 

இந்நிலையில், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் சென்னை விமானநிலைய வளாகத்துக்கு முன் கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடியே திரும்பி போ என்றும் அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று பேசிய தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாரதிராஜா உள்ளிட்டோர் கோஷமிட்டனர்.  அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

பின்னர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News