கல்லீரலை காக்கும் காவலன்.. தினமும் இதை மட்டும் செய்யுங்கள்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? இதற்கு யோகா ஒரு முழுமையான தீர்வை வழங்குகிறது. இந்த ஐந்து யோகாசனங்கள் சிறந்த கல்லீரல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிப்பதன் மூலம் கொழுப்பு கல்லீரலை நிர்வகிக்க உதவும்.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இங்கு குறிப்பிட்ட யோகாசனங்களை செய்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவது மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கியம் மேம்படும்.

 

1 /6

தனுராசனம்: வில் போன்ற வளைந்த போஸ் தான் இந்த தனுராசனம். முதலில் தரையில் படுத்து, உங்கள் வயிறு தரைப் பகுதியைத் தொடும்படியும், கால்களை சிறிது அகலமாக விரித்தும் வைத்துக் கொண்டு கைகளை உடலின் பக்கவாட்டில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். காலின் கீழ்பகுதி மெதுவாகத் தூக்கி உங்களுடைய கைகளை கணுக்கால்களைப் பிடித்தபடி வைத்திருங்கள். பின்னர் மூச்சை இழுத்து விட்டபடி மார்பு மற்றும் கால்களின் மேல்பகுதியை உயர்த்துங்கள். 

2 /6

புஜங்காசனம்: வயிற்றுப் பகுதியை தரையில் வைத்து நேராக படித்துக் கோண்டி உங்கள் உள்ளங்கைகளை தோள்களுக்கு இடையில் வைத்துக் கொள்ளுங்கள். பாதங்கள் இரண்டையும் நேராக வைத்துக் கொண்டு உள்மூச்சு இழுத்து மூச்சை கட்டுப்படுத்தவும். தோள்களை விரித்து தலையை மேல் நோக்கி தூக்கவும். இந்த சமயம் உங்கள் பாதங்களில் அழுத்தம் கொடுக்கவும்.

3 /6

சலம்ப புஜங்காசனம்: கைகளை மடித்து கை முட்டி மார்புக்கு அருகில் இருக்குமாறு வைத்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும். இரண்டு முன்னங்கைகளும் நேராக இருக்க வேண்டும். தலையையும் மார்பையும் உயர்த்தவும். இப்போது உங்கள் கை முட்டி, உங்கள் தோள்களுக்கு நேர் கீழே இருக்கும். முகத்தை நேராக வைக்கவும்.பின், ஆரம்ப நிலைக்கு வரவும்.

4 /6

திரிகோணாசனம்: முதலில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பின்னர் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, தோள்பட்டைக்கு இணையாக நேராக நீட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சை வெளியே விட்டுக் கொண்டு இடது பக்கம் வளைந்து இடக் கையால் இடது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். முகமானது மேலே உள்ள வலது கையின் நுனிவிரலைப் பார்க்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். பின்னர் மூச்சை வெளி விட்டுக் கொண்டு வலது பக்கம் வளைந்து வலது கையால் வலது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். முகமானது மேலே உள்ள இடது கையின் நுனிவிரலைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். சில நொடிகளுக்கு. பின் மெதுவாக மூக்கை உள்ளிழுத்துக் கொண்டே நிமிட வேண்டும்.  

5 /6

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்:  யோகா மேட்டில் கால்மேல் கால் போட்டு உட்காரவும். உடலை இடது பக்கமாக திருப்பும் பொழுது வலது கையை இடது முழங்காலில் வைக்கவும். உடலை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருந்து தோள் வரை திருப்ப வேண்டும். இதை செய்யும் பொழுது உடலை தூக்க கூடாது. பின்னர் உங்களுடைய இடது கையை வளைத்து இடுப்புக்கு பின்னால் பாயில் வைக்கவும். இந்த தோரணையில் சிறிது நேரம் இருந்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்பலாம். 

6 /6

பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.