சனி பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Sani Peyarchi Palangal: சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கபப்டுகிறார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் கும்ப ராசியில் சனி நுழைந்தார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சனி பெயர்ச்சி (Saturn Transit) அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் பொன்னும் பொருளும் சேரும். 

1 /8

ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மொத்தம் இரண்டரை வருடங்கள் ஆகும்.  

2 /8

ஒரே ராசியில் சனி அதிக காலத்திற்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். ஒரு நபரது ஜாதகத்தில் சனி சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் அனைத்து வித சுக போகங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். 2025 வரை அவர் இந்த ராசியில் இருப்பார்.

3 /8

சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் மிக நலல் பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு சனி பொன்னையும், பொருளையும், புகழையும் அள்ளிக்கொடுப்பார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /8

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். 2025 வரை சனி இந்த ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். இது தவிர, கும்ப ராசியில் ஷஷ என்ற ராஜயோகமும் உருவாகி வருகிறது. இதன் தாக்கத்தால் உங்கள் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் உயரும். பெரியவர்களுடன் உறவை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள்.    

5 /8

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாகப் பலன் அடைவார்கள். சனியின் ஆசியால் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணமும் திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால், பின்வாங்க வேண்டாம். இந்த காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும். 

6 /8

துலாம்: சனிபகவானின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வேலை கிடைக்கலாம் அல்லது திருமணம் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். காதல் உறவுகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரி மூலம் எதிர்பாராத லாபம் பெறலாம். இந்த காலத்தில் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். 

7 /8

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும்.   

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.