ஓய்விற்கு பிறகும் ஆரம்பட வாழ்க்கை! தி கிரேட் காளியின் நிகர சொத்து மதிப்பு!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 7 அடி 1 அங்குல உயரம் கொண்ட தி கிரேட் காளி 2006ம் ஆண்டு உலக புகழ் பெற்ற WWE விளையாட்டு போட்டியில் இணைந்து மல்யுத்த வீரர் ஆனார்.

 

1 /6

தி கிரேட் காளிக்கு அவரது உயரம் ஒரு தனித்துவத்தை கொடுத்தது. இதனால் உலகெங்கிலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் மூலம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.  

2 /6

WWE தாண்டி இந்தியாவில் உள்ள இளம் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார். தற்போது கிரேட் காளியின் நிகர மதிப்பு $8 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

3 /6

WWE போட்டியில் உலக ஹெவிவெயிட் சாம்பியன் மற்றும் முக்கிய WWE போட்டிகளில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளார். அவரது சண்டைகள் அவரது பாரம்பரியத்தை உறுதிப்படுத்தியது.   

4 /6

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காளி WWE போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவரது கடந்த கால சாதனைகள் முறியடிக்கப்படவில்லை.   

5 /6

பஞ்சாப்பில் மிகப்பெரிய தோட்டத்திற்கு நடுவே பிரமாண்ட வீட்டில் தற்போது வசிக்கிறார் காளி. சிமெண்ட் மற்றும் முறுக்கு கம்பிகள் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.  

6 /6

மேலும் பல்வேறு வணிக ஒப்பந்தங்கள், முதலீடுகள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றின் மூலம் WWE ஓய்விற்கு பிறகும் சம்பாதித்து வருகிறார் தி கிரேட் காளி.