Work From Home செய்யபவர்களுக்கு ஏற்ப வெளியான சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!

கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் முழு நாட்டையும் உலுக்கி வருகிறது. இதனால் மீண்டும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் WORK FROM HOME வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் Work From Home ரீசார்ஜ் பிளான் இல் எது சிறந்தது என்கிற தேடல் மக்கள் மத்தியல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் பல வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை WFH என்கிற பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 

எனவே இந்த புகைப்பட பத்திப்பில் சிறப்பான WFH ரீசார்ஜ் பிளான் எது என்று பார்போம்!

1 /3

ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரம்பற்ற அழைப்பு மற்றும் குறைந்தபட்சம் 2 ஜிபி / நாள் டேட்டா நன்மையை வழங்கும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மிகவும் மலிவான ஜியோ ரீசார்ஜ் ரூ .249 ஆகும். அடுத்தபடியாக ரூ.444, ரூ.599 மற்றும் ரூ.2,399 ஆகியவைகள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு, 2 ஜிபி / நாள் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் OTT சந்தாக்களை வழங்குகின்றன. இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் முறையே 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை உண்டு. 

2 /3

ஏர்டெல் ரூ.249, ரூ.449 மற்றும் ரூ.698 திட்டங்கள் ஏர்டெல் சேவையின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் பிளான்கள் ஆகும். இவைகள் முறையே 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற செல்லுபடியாயை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, 2 ஜிபி / நாள் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன.

3 /3

வோடாபோன் ஐடியா வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் முதல் சிறந்த திட்டமாக ரூ.401-ஐ கூறலாம். இது 16 ஜிபி கூடுதல் டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 3 ஜிபி / நாள் டேட்டா மற்றும் ஓடிடி சந்தாக்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இதேபோல், ரூ.601 மற்றும் ரூ.804 திட்டங்களும் உள்ளன, இவைகள் முறையே 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவையும் வழங்கும்.