Taurine: மனிதனின் ஆயுளை அதிகரிக்குமா டாரைன்? ஆய்வு சொல்லும் உண்மை: நிச்சயமாய் எலும்பு வலுவாகும்

ஆற்றல் பானங்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் டாரைன், மனிதர்களின் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. டாரைன் நமது உடலுக்கு தேவையான ஒரு பொருள் என்பது பலருக்கு தெரியாது.

டாரைன் மனித ஆயுட்காலத்தை நீட்டிக்குமா என்ற ஆய்வு என்ன சொல்கிறது? ஆய்வின் முடிவு என்னவாக இருந்தாலும் சரி. ஆனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் டாரைன் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரியுமா?  

1 /9

உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் டாரைன் என்ற  மூலப்பொருள், மனிதர்களின் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது

2 /9

வயதாகும் செயல்முறையை மெதுவாக்குவதற்கும் விலங்குகளின் உயிர்ச்சக்தியைப் பராமரிப்பதற்கும் அறியப்பட்ட ஒரு துணைப் பொருளான டாரைனின் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை ஆராய ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ பரிசோதனையை நடத்துவது தொடர்பாக விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர்.

3 /9

ஆற்றல் பானங்களில் சேர்க்கப்படும் டாரைன், ஒரு நுண்ணூட்டச் சத்து ஆகும். எலிகள் மற்றும் குரங்குகள் மீதான ஆய்வுகள், டாரைன் சப்ளிமெண்ட்டுடன் தொடர்புடைய நேர்மறையான ஆரோக்கிய விளைவுகளையும், ஆயுட்காலம் அதிகரிப்பதையும் நிரூபித்துள்ளன.

4 /9

விலங்குகள் மீதான ஆய்வுகளின் முடிவு, மனிதர்களுக்கும் பொருந்துமா என்பது நிச்சயமற்றதாக இருந்தாலும், தற்போதுள்ள சான்றுகள் பெரிய அளவிலான சோதனையை நியாயப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர், குறிப்பாக டாரைன் ஏற்கனவே குறைந்த அளவுகளில் ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

5 /9

இரண்டாம் வகை நீரிழிவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது டாரைன்

6 /9

உடல் பருமன் குறைப்பில் டாரைன் பங்கு வகிக்கிறது

7 /9

தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு டாரைன் அளவு அதிகரிக்கும், கல்லீரல் நன்றாக செயல்பட டாரைன் உதவுகிறது

8 /9

எலும்புகள் வலுவாகவும், அடர்த்தி அதிகரிக்கவும் டாரைன் சுரப்பு அதிகரிப்பது அவசியம்

9 /9

உயர் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது டாரைன்