குழந்தைகளை ஏன் தனியறையில் தூங்க வைக்க வேண்டும்.!

நம் நாட்டில்தான் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இடையே படுக்க வைத்து உறங்க வைக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். வெளிநாடுகளில் அப்படி இல்லை. இதற்கான காரணம் இதுதான். 

 

1 /5

சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.

2 /5

குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விடும் பழக்கத்தை மாற்றி, தட்டில் போட்டு தனியாக உண்ண பழக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் தன் வேலையை தானே செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு தோன்றும். 

3 /5

இரவில் தனியறையில் தூங்க பயப்படும் குழந்தைகளை, பெற்றோர் தங்கள் அறையிலேயே தனி கட்டிலில் தூங்க வைத்து பழக்கப்படுத்த வேண்டும்.   

4 /5

தாயின் தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ இல்லாமல் உறங்கி பழகும் குழந்தை தனக்கு அடுத்தபடியாக பிறக்கும் குழந்தையை எதிரியாக பார்க்கும் நிலை இருக்காது.  

5 /5

பெற்றோர் குழந்தைகளிடம் இல்லை, முடியாது, கிடைக்காது என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் பிடிவாதம் குறைந்து வாழ்கையின் எதார்த்த நிலை தெரிந்து குழந்தை வளர அது உதவியாக இருக்கும்.