சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர்.
அருண் ஐபிஎஸ் இதற்கு முன்பு நாங்குநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் டிஎஸ்பியாகவும் கரூர், குமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் எஸ்பியாகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட இடங்களில் துணை ஆணையராக இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார்.
சிபிசிஐடி பிரிவிலும் நீண்ட நாள் பணியாற்றிய அனுபவமும் அருணு அவர்களுக்கு உண்டு. 2012ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரகத்தில் ஐஜியாகவும், பிறகு திருச்சி மாநகரின் எஸ்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
இதற்கு முன்பு சென்னையில் பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவியை அருண் வகித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கவனித்து வந்த அருண் தற்போது சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.