உடல் எடையை குறைக்க எந்த அரிசி நல்லது? இதோ உங்களுக்கான சாய்ஸ்

best rice for weight loss : உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் எந்த அரிசியை சாப்பிடலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசி உணவை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என கூறப்படும் நிலையில், எந்த அரிசியை சாப்பிட்டு உடல் எடையை கூட்டலாம் என தெரிந்து கொள்வோம்.

1 /6

இந்தியாவில் அரிசி உணவு இன்றியமையாததாக மாறிவிட்டது. பலரும் ஒரு வேளையாவது சோறு சாப்பிடுவது பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அரிசி உணவு சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். 

2 /6

ஆனால் சில அரிசி வகைகள் உடல் எடையை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடல் எடையை குறைக்க சிறந்த அரிசி பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

3 /6

பிரவுன் அரிசி - இதில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் பசி எடுக்காது என்பதால் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். இது தவிர, பிரவுன் அரிசியில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

4 /6

பாஸ்மதி அரிசி - பாசுமதி அரிசி, குறிப்பாக நெய் அல்லது எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும்போது, எடை குறைக்க உதவும். பாசுமதி அரிசியின் கிளைசெமிக் குறியீடும் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

5 /6

கருப்பு அரிசி - கருப்பு அரிசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை இழப்புக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனுடன், கருப்பு அரிசியில் நல்ல அளவு இரும்புச்சத்து உள்ளது, இது ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது.

6 /6

வெள்ளை அரிசி - வெள்ளை அரிசி சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைப்பது கடினமாக இருக்கலாம். வெள்ளை அரிசியில் நார்ச்சத்து இல்லாததால் விரைவில் செரிமானமாகி பசியை உண்டாக்கும். அதனால் இந்த அரிசியை சாப்பிடுபவர் அதிகமாக சாப்பிட வேண்டியிருக்கும். இதனாலேயே வெள்ளை அரிசி உடல் எடையை கூட்டும் என கூறப்படுகிறது.