Hindu Marriage System: திருமணம் என்பது வாழையடி வாழையாக பல தலைமுறைகளை நன்றாக வைக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் நடத்துவது. இந்து முறைப்படி திருமணம் என்று வந்தால், ஜாதகம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யலாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்தால், ஜாதகம் எடுக்கிறேன் என்று சொல்வது வழக்கமாக உள்ளது.
Astrological Match For Wedding: திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பல உள்ளன. ஆனால், ஒரே ஒரு விஷயத்தின் அடிப்படையில் எந்தவொரு வரனின் ஜாதகத்தை நிராகரிப்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ கூடாது. உதாரணமாக பொதுவான நட்சத்திரப் பொருத்தம் அல்லது ராசிப் பொருத்தத்தின் அடிப்படையில் திருமணத்தை முடிவு செய்யவோ அல்லது வேண்டாம் என்று நிராகரிக்கவோக் கூடாது.
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது பெண், ஆண் இருவரின் ஜாதங்களையும் முழுமையாக ஆராய்ந்து பொருத்தம் பார்க்க வேண்டும். தனபாவகம் எனும் இரண்டாம் இடத்தையும், புத்திரபாவகம் எனும் ஐந்தாமிடத்தையும், களஸ்திர ஸ்தானம் எனும் ஏழாம் இடத்தையும், பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடத்தையும் கவனமாக ஆராய வேண்டும்
பொதுவாக கல்யாணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம். அவற்றில் முக்கியமானவை தினப் பொருத்தம் மற்றும் மனப்பாங்கைக் கணிக்கும் கணப் பொருத்தம்
இருவரின் உடல் நலத்தையும் கணிக்கும் மஹேந்திரப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் எனப்படும் ஆயுள் பாவம்
தம்பதிகளுக்கு இடையிலான பாலியல் ஈர்ப்பு தொடர்பான விஷயங்களைக் கணிக்கும் யோனிப் பொருத்தம்
இருவரின் ஆயுளையும் இணைந்து கணிக்கும் ராசிப் பொருத்தம்
உளவியல் ரீதியில் இருவருக்கும் ஒத்துப்போவதை கணிக்கும் ராசியாதிபதி பொருத்தம்
இருவருக்கும் ஒருவரை மற்றொருவர் ஈர்க்கும் திறன் இருக்கிறதா என்பதை கணிக்கும் வசியப் பொருத்தம்
மண வாழ்க்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதைச் சொல்லும் ரஜ்ஜு பொருத்தம்
இருவரின் மன ஓட்டத்தைக் கணிக்கும் வேதை பொருத்தம்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது