நம்மில் பலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, உடலை இளைக்க ஜிம்மிற்கு செல்வோம். ஆனால், ஜிம்மில் சேர உகந்த வயது என்ன தெரியுமா?
ஒரு காதல் தோல்வி வந்து விடக்கூடாது. உடனே, ஜிம்மிற்கு போய் ஃபிட்டா வெச்சுக்கப்போறேன் என ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா போல பலர் பையை தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவர். உடலை பராமறித்துக்கொள்வது மிக முக்கியம் என்றாலும், ஜிம்மில் சேருவதற்கு உகந்த வயது என்று ஒன்று இருக்கிறது. அது என்ன வயது? ஏன் அந்த வயதிற்கு குறைவாக உடற்பயிற்சி கூடத்தில் சேரக்கூடாது? இங்கு பார்ப்போம்!
கை தசை, கால் தசை, மார்பு, பின் பகுதி, முதுகு என அனைத்திற்கும் ஜிம்மில் ஒரு வர்க்-அவுட் இயந்திரம் இருக்கிறது. இதை, சரியான வழிக்காட்டுதலுடன் பயன்படுத்துவது சிறந்தது.
சில சமயங்களில், 14 முதல் 15 வயது வரை இருப்பவர்கள் கூட உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து விடுகின்றனர். இது முறையா? இதற்கு தகுந்த வயதுதான் என்ன?
தகுந்த வயதில் அல்லாமல், முன் கூட்டியே ஜிம்மில் சேர்ந்து விட்டால், நம் தசைகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படலாம்.
17-18 வயதில், அனைவரின் உடலும் ஹார்மோன்களும் மாற்றத்திற்கு உள்ளாகும். அப்போது, எந்த உடற்பயிற்சி செய்தாலும் அதை தாங்க கூடிய சக்தியும் நமது உடலுக்குகிடைக்கும் என கூறப்படுகிறது.
எனவே, 17-18 வயதில், உடற்பயிற்சி கூடத்தில் சேருவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே, சிறு வயதிலேயே பெரிய பெரிய உடற்பயிற்சிகளை எல்லாம் செய்யாமல், சிம்பிளான பயிற்சிகளை செய்து உடலை பாதுகாத்துக்கொள்வது நல்லதாகும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.