ICC T20 World Cup History: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 8 அணிகளை இதில் காணலாம்.
நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) ஜூன் 2ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கிறது.
2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்த பட்டியலில் 7ஆவது இடத்தை பிடிக்கிறது.
2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடிக்கிறது.
2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் உகாண்டா அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது.
2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது, இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்கிறது.
2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.
2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் உகாண்டா அணியை மேற்கு இந்திய தீவுகள் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது.
2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கென்யா அணியை இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது.