Tirupati Mottai Mudi Kannikai : திருப்பதி என்றாலே லட்டும் மொட்டையும் தான்! லட்டு விவகாரம் பெருமாளுக்கே தலைவலி கொடுத்திருக்கும். ஆனால், பெருமாளுக்கு மக்கள் முடி காணிக்கை கொடுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மெட்டை அடித்து, முடி தானம் செய்தால், இந்த காணிக்கைக்கு மனம் மகிழ்ந்து, அவருடைய வருமானத்தை பத்து மடங்கு அதிகமாக்குவார் பெருமாள் என்பது ஐதீகம்... ஏன்? எப்படி? எதற்கு? தெரிந்துக் கொள்வோம்...
திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடிப்பது என்பது உலகம் முழுவதும் பிரசித்தியான வழக்கமாகும். பெருமாளுக்கு பக்தர்கள் கொடுக்கும் முடிக்காணிக்கை மூலம் கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது
திருப்பதியில் மொட்டை அடிப்பதற்கான வழக்கம் எப்போது தொடங்கியது என்பதையும் அதன் பின்னணி காரணத்தையும் தெரிந்துக் கொள்வோம்
பக்தியால் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. இந்த பழக்கம் வழக்கமாக காரணம், பத்மாவதியை பெருமாள் திருமணம் செய்துக் கொண்டது தான்
அன்னை பத்மாவதியை, சீனிவாச பெருமாள் திருமணம் செய்தபோது, பெண்ணுக்கு வரதட்சணை கொடுப்பது மாப்பிள்ளை வீட்டாரின் வழக்கம். எனவே, பத்மாவதித் தாயாரை திருமணம் செய்துக் கொள்வதற்காக பெருமாள் குபேரனிடம் கடன் வாங்கினார்.
குபேரனின் கடனை அடைப்பதாக வெங்கடேஸ்வர சுவாமி உறுதியளித்தார். அது வரை அவர் வட்டி கட்டி வருவதாகவும் உறுதியளிக்கிறார். கணவர் வெங்கடேசப் பெருமானின் கடனை அடைக்க உதவுபவர்களின் செல்வமும் ஆரோக்கியமும் 10 மடங்கு பெருகும் என்று லட்சுமி தேவி ஆசி அளித்தார்.
திருப்பதியில் பக்தர்கள் கொடுக்கும் முடிக் காணிக்கை, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
உலகெங்கும் இருந்து வரும் பக்தர்கள், திருப்பதி பெருமாளுக்கு கொடுக்கும் முடி காணிக்கையின் அளவு ஆண்டுக்கு சுமார் 700 டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் 400 முதல் 500 கோடி ரூபாய் வரை திருப்பதி கோவிலுக்கு வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது