Health Tips: பால் ஒரு முழுமையான உணவாக அறியப்படுகிறது. ஏனெனில் அதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளிலேயே நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. இவற்றில் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அவற்றால் பல பிரத்யேகமான, குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி ஒரு உணவு சேர்க்கையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாலில் இருந்து கிடைக்கும் மற்றொரு சிறப்பம்சம் வாய்ந்த பால் பொருளை பாலுடன் கலந்தால் அதனால் கிடைக்கும் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். அந்த தனிச்சிறப்பு வாய்ந்த பால் பொருள் நெய் ஆகும். நெய்யை திரவ தங்கம் என்று அழைத்தால் அதை மறுப்பதற்கில்லை. பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெய் சேர்ப்பது பாலில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை (வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே) உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் உடலில் அவற்றின் இருப்பு கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகள்: நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை நீடித்த ஆற்றலையும் பல்வேறு உடல் செயல்பாடுகளை முடிக்க ஆதரவையும் வழங்குகிறது.
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை நமக்கு தொடர்ச்சியான ஆற்றலைத் தருகின்றன. இதன் மூலம் உடல் செயல்பாடுகளுக்கு பெரிய அளவிளான உதவி கிடைக்கிறது. இதனால்தான் இந்த சிறந்த பால் தயாரிப்பை பாலுடன் கலந்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
நெய் மற்றும் பாலின் கலவையானது உடலுக்கு அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நெய் மூட்டுகளுக்கு இயற்கையான லூப்ரிகண்டாகவும் செயல்படுகிறது. இது மூட்டு வலியின் அபாயத்தைக் குறைக்கிறது.
தூக்கமின்மையால் சிரமப்பட்டு, நிம்மதியான உறக்கத்தைப் பெற விரும்புபவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் நெய் கலந்து குடிக்கவும். இது அவர்களின் தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும்.
நெய் வயிற்று அமிலங்களின் சுரப்பைத் தூண்டி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது.
நெய்யுடன் பால் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது தொப்பையை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.