சமூக ஊடகங்களில் வைரலாகும் சிகை அலங்கார போட்டி! உறைய வைத்த முடி அலங்காரம்

International Hair Freezing Contest: மைனஸ் 30 டிகிரி குளிர்ச்சியான நீரில் குளித்து, தலை முடியை உறைய வைக்கும் போட்டியை கேட்டதுண்டா இல்லை பார்த்தது தான் உண்டா?

குளிர்காலத்தில், குளிக்கும்போது, தண்ணீர் சூடாக இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு குளிப்பவர்கள் நிறைந்த உலகம் இது. ஆனால், -30 டிகிரியில் சிகை அலங்காரம் செய்து அதில் பரிசு வாங்கும் வித்தியாசமான போட்டி பற்றி தெரியுமா?

1 /7

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் உறைந்த சிகை அலங்கார புகைப்படங்களில் மக்கள் தங்கள் உறைந்த சிகை அலங்காரங்களைக் காட்டுகிறார்கள்.  

2 /7

சர்வதேச முடி உறைதல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் கனடாவின் யூகோனில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், மக்கள் வெந்நீரில் குளித்துவிட்டு -30 டிகிரி செல்சியஸில் வெளியே சென்று சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

3 /7

கனடிய மாகாணமான யூகோனில் அமைந்துள்ள சர்வதேச முடி உறைதல் போட்டியானது தகினி ஹாட் பூலில் ஒவ்வொரு பிப்ரவரியிலும் நடைபெறும் ஒரு வேடிக்கையான குளிர்கால திருவிழா ஆகும். 

4 /7

போட்டியாளர்கள் குளத்தின் வெதுவெதுப்பான நீரில் தங்கள் தலைகளை மூழ்கடித்து, பின்னர் மேலே உள்ள குளிர்ந்த காற்றில் உறைந்து, தங்கள் தலைமுடியை உறைந்த சிகை அலங்காரங்களாக வடிவமைக்கிறார்கள்.

5 /7

சர்வதேச முடி உறைதல் போட்டியின் போது இப்பகுதியில் வெப்பநிலை -30° செல்சியஸ் அல்லது -22° ஃபாரன்ஹீட்டை எட்டும். இதில், வெற்றி பெறும் பங்கேற்பாளர்களுக்கு ரொக்கப் பரிசு கிடைக்கும்.

6 /7

 முழுமையான செயல்முறை இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூடான நீரூற்றில் உங்கள் தலையை நனைத்து, உங்கள் தலைமுடியை முழுமையாக ஈரப்படுத்தவும். பின்னர் வெளிப்புற வெப்பநிலை -20 ° C க்கு கீழே இருக்க வேண்டும். குளிர் காற்று காரணமாக முடி படிப்படியாக உறைகிறது. அவ்வப்போது வெந்நீரில் மூழ்கி காதுகளை சூடாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

7 /7

முடி உறைந்து போகும் வரை காத்திருக்க வேண்டும். இறுதியில் ஈரமான முடிகளும் உறைந்துவிடும், இதில் புருவங்கள் மற்றும் கண் இமைகள் கூட அடங்கும். கூந்தல் குளிர்ச்சியால் உறைந்தவுடன், அது வெண்மையாகத் தோன்றும். பின்னர் பங்கேற்பாளர் குளத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் மணியை அடிக்கிறார். இதற்குப் பிறகு, ஊழியர்கள் உங்கள் படத்தை எடுப்பார்கள். இறுதியில் வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.