Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் சாட்-உணவுகள்!

சாட் உணவுகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், அதே சமயம் நாம் சில இயற்கையான பொருட்களை சாட் உணவுகளாக செய்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

 

1 /5

சாட் உணவுகள் சாப்பிடவேண்டும் அதேமயம் உடலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்பார்வுட்ஸ் சாட்டை சாப்பிடலாம்.  பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இந்த சாட் உணவை தயாரித்து சாப்பிடலாம்.  

2 /5

அவலை வைத்து நிறைய சிற்றுண்டிகள் தயாரிக்கலாம், சத்து மிகுந்த அவளை சாட் உணவாக மாற்றலாம்.  அவலுடன் சில மசாலாக்கள் மற்றும் நீங்கள் விரும்பும் காய்கறிகளை சேர்த்து அவல் சாட் செய்யலாம்.  

3 /5

தாமரையிலிருந்து பெறப்படும் மக்கானா எனும் இந்த விதையை வைத்து சாட் உணவு செய்யலாம்.  மக்கானாவுடன் உருளைக்கிழங்கு, கடலை, பச்சை மிளகாய், சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் இந்த சாட் உணவு ருசியானதாக இருக்கும்.  

4 /5

சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதிலும் சில மசாலாக்களை கலந்து சாப்பிடலாம்.  இதில் நிறைய ஊட்டசத்துக்கள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.  

5 /5

தந்தூரி சாட்டின் ருசி அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழம் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு இந்த தந்தூரி சாட் செய்யப்படுகிறது.  இது சுவையாகவும் உடலுக்கு நன்மையளிப்பதாகவும் இருக்கிறது.