என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா... இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்...

Weight Loss Mistakes: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். அதற்கு நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் கூட காரணமாக இருக்கலாம்.

உடல் பருமன் என்பது ஒரு நோய் இல்லை என்றாலும், அது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

1 /8

Weight Loss Mistakes: நீண்ட காலமாக டயட்டிலிருந்தும், உடல் பருமனை குறைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு, இந்த செய்தி உதவியாக இருக்கும். குறைக்க கடுமையான டயட் முறையை பின்பற்றும்போது, நாம் நம்மை அறியாமல் சில தவறுகளை செய்யலாம்.  

2 /8

கடுமையான டயட் முறையை பின்பற்றுவதால், உங்களுக்கு பசி அதிகரிக்கலாம். டயட் உங்களுக்கு பசி உணர்வை ஏற்படுத்தாத டயட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால் பசி இருந்தால் நம்மை அறியாமல் நாம் அதிகம் சாப்பிடுவோம். தகுந்த உணவியல் நிபுணரை ஆலோசனை செய்த பிறகு உங்களுக்கான டயட்டை நிர்ணயம் செய்வது நல்லது.  

3 /8

அவசரமாக சாப்பிடும் பழக்கம்: நம்மில் பலருக்கு மிக அவசரமாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. உணவை நன்றாக மென்று நிதானமாக சாப்பிடும் போது,. உமிழ்நீர் உணவுடன் நன்றாக கலந்து, செரிமானம் சிறப்பாக இருக்கும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்

4 /8

உணவை தவிர்ப்பது: பலருக்கு டயட்டின் போது உணவை தவிர்ப்பதால் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நாம் இடையில் ஏற்படும் பசியை போக்க சிப்ஸ் குக்கீஸ் போன்றவற்றை சாப்பிடும் நிலை ஏற்படும். இதனால் உடல் எடை குறைவதற்கு பதிலாக கூடும்.  

5 /8

இரவு உணவு: உடல் பருமன் குறைக்க இரவு உணவை மிக சீக்கிரம் சாப்பிட வேண்டியது மிக அவசியம். இரவு ஏழரை மணி அல்லது எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்து விட்டால், செரிமானம் சிறப்பாக இருக்கும். நீங்கள் தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே உங்களது இரவு உணவை முடித்து விட வேண்டும்.

6 /8

நீர்ச்சத்து குறைபாடு: தினமும் போதுமான நீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உங்கள் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, உடல் பருமன் கூடலாம். போதுமான நீரை அருந்துவதால் உடலில் உள்ள கழிவுகளும் வெளியேறும். பசியும் கட்டுக்குள் இருக்கும்.  

7 /8

தூக்கமின்மை: இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருந்தால், என்ன தான் டயட் எடுத்துக் கொண்டாலும் உடல் எடை குறையாது. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், உடல் பருமன் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியமான டயற்றுடன் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.