Weekly Horoscope (Nov 13-19): அனைத்து ராசிகளுக்குமான வார பலன்கள்...!!

Weekly Horoscope (Nov 13-19): தீபாவளிக்குப் பிறகு சோமவதி அமாவாசை நவம்பர் 13, 2023 அன்று, புதிய வாரம் தொடங்குகிறது. இது 2023 ஆம் ஆண்டின் கடைசி சோமவதி அமாவாசை ஆகும். இந்த வாரம் கிரகங்களின் இயக்கமும் மாறுகிறது.

இந்த வார கிரக பெயர்ச்சிகளை பொறுத்தவரை, 16 நவம்பர் 2023 அன்று, செவ்வாய் விருச்சிக ராசிக்கு செல்லும். இதனுடன், சூரியன் 17 நவம்பர் 2023 அன்று பெயர்ச்சியாகிறாது இந்த வானியல் நிகழ்வுகளும் இந்த வாரம் உங்கள் ராசியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்நிலையில், அனைத்து ராசிகளுக்குமான வார பலன்களை அறிந்து கொள்வோம்.

 

1 /14

Weekly Horoscope (Nov 13-19):  நவம்பர் மூன்றாம் வார கிரக பெயர்ச்சிகளை பொறுத்தவரை, 16 நவம்பர் 2023 அன்று, செவ்வாய் விருச்சிக ராசிக்கு செல்ல உள்ளது. இதனுடன், சூரியன் 17 நவம்பர் 2023 அன்று பெயர்ச்சியாகிறாது இந்த வானியல் நிகழ்வுகளும் இந்த வாரம் உங்கள் ராசியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்நிலையில், அனைத்து ராசிகளுக்குமான வார பலன்களை அறிந்து கொள்வோம்.

2 /14

மேஷ ராசியினர் இந்த வாரம் கவனமாக இருங்கள், எதிரிகளால் பாதிப்பு ஏற்படலாம். அரசு ஊழியர்களுக்கு அரசிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். ஈடுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் அலட்சியமாக இருக்கக்கூடாது. பணம் விரயமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே செலவில் கவனம் தேவை.

3 /14

ரிஷப ராசியினருக்கு வாரத் தொடக்கத்தில் பணச் செலவுகள் கூடும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும். யாரையும் பற்றி கிசுகிசுக்காதீர்கள். இல்லையெனில் உறவுகள் கெட்டுவிடும். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் தகராறில் ஈடுபடலாம். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பார்கள், இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்.

4 /14

காதல் உறவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அதிக சோர்வு இருக்கும் என்பதால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. இந்த வாரம் வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு  சவாலான வாரமாக இருக்கும். ஆனால் நிலைமையை சாதுர்யமாக சமாளித்து விடுவீர்கள். திருமணம் தாமதமாகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

5 /14

கடக ராசியினருக்கு, இந்த வாரம் கலவையான பலன்களை கொடுக்கும். பிறருக்கு உதவுதல், தொண்டு வேலைகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் நீங்கள் பிஸியாக இருக்கப் போகிறீர்கள், பயணம் செய்ய வேண்டியிருக்கும். மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவது நல்லதல்ல. செலவுகள் அதிகரிக்கும், தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் மாதக் கடைசியில் கடன் வாங்க நேரிடும்.

6 /14

சிம்ம ராசியினருக்கு வேலை கிடைக்க இன்னும் சில நாட்கள் போராட வேண்டியிருக்கும். இந்த வார விழாவில் கலந்து கொண்டு மகிழுங்கள். உங்கள் உறவுகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயங்கும் போக்கு காரணமாக தொழிலில் வரும் தடைகள் நீங்குவதில் சிரமம் ஏற்படும். பொய் சொல்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

7 /14

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆனால் பயணங்கள் மற்றும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரசு உத்தியோகத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு ஆதாயம், சம்பள உயர்வு கூடும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இதய நோயாளிகள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

8 /14

துலாம் ராசியினர், இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டாலும், அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்களை உங்கள் பணியால் கவர்வீர்கள். வருமானம் கூடும். புதிய படைப்புகளுக்கும் அடித்தளம் அமைக்கலாம்.

9 /14

விருச்சிக ராசியினரே, இந்த வாரம் நீங்கள் சரியானவர்களையும் தவறானவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். தன் தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னேறுபவனே வெற்றிகரமான நபர். இந்த வாரம் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் குழப்பத்தை உருவாக்கும் நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நிதி ஆதாயம் கூடும். பயணம் செய்ய வேண்டி வரலாம்.

10 /14

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் வாக்குவாதங்கள் மற்றும் சர்ச்சைகளை தவிர்ப்பீர்கள். சிலர் இதற்கு உங்களைத் தூண்டலாம், ஆனால் நீங்கள் அவர்களின் வார்த்தைகளால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு புதிய உள்ளடக்கத்திற்கு பஞ்சம் இருக்காது. உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

11 /14

மகரம் ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள்.  நீண்டகால பிரச்சனையில் இருந்து விடுபடலாம். கோபப்படாதீர்கள், உறவுகள் கெட்டு விடும். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்கள் பயன் பெறலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் சில நல்ல செய்திகள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள்.

12 /14

கும்ப ராசியினரே, சனி உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார், சனியும் நேராக மாறிவிட்டது. இப்போது நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும் போல் தெரிகிறது. இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிலம் தொடர்பான வேலைகளில் லாபம் கிடைக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.  

13 /14

மீன ராசியினரே, நவம்பர் மாதத்தின் இந்த வாரம் உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். மன அழுத்த சூழ்நிலையும் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். மோதல் சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வாரத்தின் நடுப்பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

14 /14

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.