லியோ to சித்தா-2023 டாப் ஹிட் படங்களை ‘இந்த’ ஓடிடி தளங்களில் பார்க்கலாம்!

2023 Top Hit Movies: இந்த வருடம் வெளியான டாப் ஹிட் படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.

2023 Top Hit Movies: இந்த ஆண்டு வெளியான பல படங்கள் வசூலிலும் விமர்சனத்திலும் பெரிய ஹிட் அடித்துள்ளன. அதில் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி, பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளன. அவை என்னென்ன படங்கள்? அந்த படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதோ முழு விவரம்.

1 /8

இந்த ஆண்டு, கணக்கிலடங்கா படங்கள் வெளியாகின. அதில் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளன. ஒரு சில படங்கள் வசூலிலும் சாதனை படைத்தன. அப்படி ஹிட் அடித்த படங்கள் என்னென்ன என்பதையும், அந்த படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம் வாங்க. 

2 /8

எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான படம் சித்தா. இதில், நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக வந்தார். இந்த படம், பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சித்தா படத்தை வரும் 28ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஆன்லைனில் பார்க்கலாம். 

3 /8

சிம்பிளான பட்ஜெட்டில், காமெடியுடன் கருத்தூசி போடும் படமாக எடுக்கப்பட்டது, குட் நைட். இந்த படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார். மீதா ரகுநாத் நாயகியாக நடித்திருந்தார். குறட்டை பிரச்சனை இருக்கும் ஒருவன், அதனால் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை காமெடியாக இப்படம் கூறியிருந்தது. இதனை புதுமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். படம் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து, பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. 

4 /8

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம், லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டதை தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. 

5 /8

மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-2. த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். 

6 /8

ரஜினிகாந்த் பல நாட்களுக்கு பிறகு கம்-பேக் கொடுத்த படம், ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். தமிழ், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களின் முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் கண்டுகளிக்கலாம். 

7 /8

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம், வாரிசு. விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடபள்ளி இயக்கியிருந்தார். படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய்யும் புதிய கெட்-அப்பில் இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தையும் அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். 

8 /8

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விஷாலுக்கு முதல் முறையாக ரூ.100 கோடியை கலெக்ட் செய்து கொடுத்த படம் இது என கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம்.