டி20இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி என்ன செய்திருக்கிறார்...? ஒரு பார்வை

இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வைத்துள்ள சாதனைகளை இங்கு காணலாம். 

  • Jun 24, 2024, 17:33 PM IST

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வழக்கத்தை விட விராட் கோலி மிக சுமாராகவே பேட்டிங் செய்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது. 


 

 

1 /8

சர்வதேச டி20 அரங்கில் மொத்தம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 இன்னிங்ஸ்களில் விளையாடி 794 ரன்களை அடித்துள்ளார்.   

2 /8

அதாவது மொத்தம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 552 பந்துகளை அவர் டி20இல் சந்தித்துள்ளார். 6 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார்.  

3 /8

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி வைத்துள்ள சராசரி 52.93 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 143.84 ஆகும்.   

4 /8

விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 முறை அரைசதம் அடித்துள்ளார். 

5 /8

ஆனால், இதுவரை விராட் கோலி டி20இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தது இல்லை. ஒரே ஒரு முறைதான் டக் அவுட்டாகி உள்ளார்.   

6 /8

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 60 பவுண்டரிகளையும், 26 சிக்ஸர்களையும் டி20இல் அடித்துள்ளார்.   

7 /8

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடி 120 ரன்களை அடித்துள்ளார். இதில் அவர் 60.00 சராசரியும், 139.53 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். அதிகபட்சமாக 82 ரன்களை அடித்துள்ளார்.   

8 /8

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 கேட்ச்களை விராட் கோலி பிடித்துள்ளார்.