பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத்தின் சம்பள விவரம் மற்றும் சொத்து விவரங்களை பற்றி பார்ப்போம்.
பிரபல தொகுப்பாளர் கோபிநாத் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரிகிறார். மேலும் அவ்வப்போது செலிபிரேட்டிகளை இன்டெர்வியூ எடுக்கிறார்.
அறந்தாங்கியில் பிறந்த இவர் தமிழ்நாட்டின் முக்கிய தொகுப்பாளராக இருந்து வருகிறார். நீயா நானா முக்கிய நிகழ்ச்சியாக இருந்தாலும் விஜய் விருதுகள், குற்றம் மற்றும் பின்னணி போன்ற நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்துள்ளார்.
தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!, நேர் நேர் தேமா, நீயும் நானும் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார் கோபிநாத். இதன் மூலம் தன்னை நல்ல எழுத்தாளராகவும் மாற்றிக்கொண்டுள்ளார்.
திறமையான பேச்சாளர், எழுத்தாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவராக கோபிநாத் உள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருகிறார்.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் இருந்து இப்போது வரை கோபிநாத் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கோபிநாத் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய சொத்து மதிப்பு 7 முதல் 10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.