ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களில் ஹை பிபியும் ஒன்று. அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
நல்ல வாழ்க்கை முறை, சீரான உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு DASH டயட்டைப் பின்பற்றுவது நன்மை பயக்கும் என நேஷனல் ஹார்ட், லங் மற்றும் ப்ளட் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு DASH உணவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும். இவ்வகை உணவுகளை உண்பதால் இரத்த அழுத்தம் குறையும். பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதும் நன்மை பயக்கும்.
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வது நன்மை பயக்கும். இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் உணவில் சோடியத்தின் அளவைக் குறைக்க வேண்டும். உப்பு குறைவாக சாப்பிடுவது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினமும் 1,500 மி.கி சோடியத்தை உட்கொள்ள வேண்டும்.