USA vs IND: இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள்...!

USA vs IND Match: டி20 உலகக் கோப்பையில் இன்று அமெரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அணியில் விளையாடும் ஐந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களை இங்கு காணலாம். 

  • Jun 12, 2024, 19:52 PM IST

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

1 /8

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா - இந்தியா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.  

2 /8

இரு அணிகளும் தங்களின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.   

3 /8

அந்த வகையில், இன்று விளையாடும் அமெரிக்க அணியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்பது குறித்தும் அவரது விவரங்களையும் இங்கு காணலாம்.   

4 /8

5. மிலிந்த் குமார்: இவர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி மற்றும் சிக்கிம் அணிகளுக்காக விளையாடி உள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.   

5 /8

4. நிதிஷ் குமார்: இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும், கனடா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடிவர் ஆவார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கனடா அணி சார்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.   

6 /8

3. ஹர்மீத் சிங்: அமெரிக்காவுக்கு செல்லும் முன்னர் இவர் மும்பை மற்றும் திரிபுரா அணிகளுக்காக உள்நாட்டு தொடர்களில் விளையாடினார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்குவாடிலும் இடம்பெற்றிருந்தார்.   

7 /8

2. மோனக் பட்டேல்: இவர் தற்போதைய அமெரிக்க அணியின் கேப்டன் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.   

8 /8

1. சவுரப் நெட்ரவால்கர்: இவர்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரின் ஹீரோ ஆவார். இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். 2010ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியவர்களில் இவரும் ஒருவர். அந்த தொடரில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெற்றிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.