Salary Of Newly Elected Member Of Parliament : ஏறக்குறைய 9000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமரின் சம்பளம் எவ்வளவு? அவரைத் தவிர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் ஊதியம் எவ்வளவு என தெரிந்துக் கொள்வோம்
நரேந்திர மோடி பிரதமரான பிறகு மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளமாக பெறுவார். அடிப்படைச் சம்பளம் ரூ.50 ஆயிரத்துடன் சேர்த்து ரூ.3000 செலவுக் கொடுப்பனவும், நாடாளுமன்றக் கொடுப்பனவு ரூ.45000 பெறுவார்
பிரதமருக்கு தினசரி 2000 ரூபாய் தினப்படியும் கிடைக்கிறது. சர்வதேச பயணங்களுக்கு, கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளும் அரசாங்கத்தால் ஏற்கப்படுகின்றன
ஓய்வு பெற்ற பிறகும், வீடு, மின்சாரம், தண்ணீர் மற்றும் எஸ்பிஜி பாதுகாப்பு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது.
ரயில் மற்றும் விமானத்தில் இலவசப் பயணம், இலவச வீடு, மருத்துவம் மற்றும் அலுவலகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் என பல வரியில்லா சலுகைகளையும் பெறுகிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி., ஆன தலைவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தவிர, தினசரி அலவன்ஸையும் பெறுகிறார்கள், இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அதிகரிக்கிறது.
நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு எம்.பி.க்கள் தினசரி 2000 ரூபாயும், சாலைப் பயணத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு பயணப்படியாக 16 ரூபாயும் பெறுகிறார்கள். இது தவிர, அரசு வீடுகள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. மின்சாரம் மற்றும் தொலைபேசி செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
எம்.பி.க்கள் தங்கள் நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.45,000 மற்றும் அலுவலக செலவுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.45,000 உதவித்தொகை பெறுகிறார்கள். ஓய்வுக்குப் பிறகு, எம்.பி.க்கள் ஒவ்வொரு மாதமும் 25,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இன்கிரிமென்ட் கிடைக்கும்.
கேபினட் அமைச்சர்களுக்கு சம்பளம் தவிர அலவன்ஸ் மற்றும் அரசு வசதிகள் கிடைக்கும். கேபினட் அமைச்சர்கள் ரூ.1 லட்சம் சம்பளம், அலவன்ஸ் மற்றும் இதர வசதிகளைப் பெறுகிறார்கள். அரசு தங்குமிடம், அரசு வாகனம், அலுவலக ஊழியர்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.