Worst Economical Effects Of COVID: நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு கணிக்க முடியாத நிலையை உருவாக்கி, நம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருருந்தது கொரோனா வைரஸ்
எதிர்காலம் குறித்த கவலைகள் அப்போது அனைவரையும் அச்சுறுத்திய நிலையில், அந்த காலகட்டத்தில் இருந்து வெளிவந்தாலும், அந்த நினைவுகள் மனதில் இருந்து என்றும் நீங்காது.
கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறும் அளவுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் உலகையே ஆட்டி வைத்த கொரோனா இன்று அடங்கிவிட்டாலும், முற்றிலுமாக முடிந்துவிடவில்லை. நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி, நம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்த கொரோனா என்ற அச்சம் தந்த வைரஸால் உலகம் சந்தித்த பொருளாதார பின்னடைவுகள் இவை...
கொரோனா வைரஸ் உலகளாவிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் முடங்கிய நிலையில், பொருளாதார நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடிந்த நிலையில், உலகம் ஸ்தம்பித்துப் போனது
லாக்டவுனுக்கு உலகம் நகரத் தொடங்கியபோது, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதித்தது. குரூஸ் லைனர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் பயணத் தடைகளால் முற்றிலுமாக முடங்கிய நிலையில் வேலைவாய்ப்புகளும் பறிபோயின. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா 10% பங்கு வகித்த நிலையில், கொரோனாவின் உலக சுற்றுலா, உலகத்தின் சுற்றுலாத்துறையை முடக்கியது
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் வணிகங்களும் முடங்கிப் போயின. பூங்காக்கள், தோட்டங்கள், ஓய்வு விடுதிகள், உயிரியல் பூங்காக்கள், மீன்வளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருமானத்தை இழந்தன
சமூக இடைவெளி என்ற முன்னெச்சரிக்கை காரணமாக உணவகங்கள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டதால் வணிகமும் படுத்தது.
உயிருக்கே ஆபத்து என்ற கொரோனாவின் வீரியத்தினால், விளையாட்டுகளும் முடங்கின. உலகமே காலியானது போல், பொது இடங்கள் அனைத்தும் காலியாக, மக்கள் வீட்டிற்குள் முடங்கினார்கள்
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் உலக அளவில் கல்வித்துறையும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும், தொழில்நுட்பம் ஆன்லைன் கற்றலுக்கான திட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், இலவச அல்லது மானியத்துடன் கூடிய பள்ளி மதிய உணவுத் திட்டங்களை நம்பியிருந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன
வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற கருத்தாக்கம் உருவாக காரணமானது கொரோனா பரவல். தொழில்நுட்ப துறையில் அதிக வாய்ப்புகளை உருவாக்கி, ஆன்லைன் நிறுவனங்கள் மற்றும் அமேசான் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற பொழுதுபோக்கு வழங்குநர்களுக்கு விற்பனையை அதிகரித்தது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகை திருப்பும் முயற்சிகளை கொரோனாவே வேகமாக முன்னெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.