வாய் பிளக்க வைக்கும் பப்பாளியின் பலே பலன்கள்

Papaya Benefits: ஆரோக்கியமான காலை உணவு பற்றி சிந்திக்கும் நபர்களுக்கு பப்பாளி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 

இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் பப்பாளி பழத்தில் நிறைந்துள்ளது. பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் உள்ளது, இது புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது. பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதால் நமது ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

1 /7

பப்பாளியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கலை (Constipation) போக்கவும் உதவும்.

2 /7

பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நமது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கும். இதனால், நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. பப்பாளியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க (Weight Loss) இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

3 /7

பப்பாளியில் வைட்டமின் சி உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும். இது நோயெதிர்ப்பு (Immunity) மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

4 /7

பப்பாளியில் (Papaya) பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவும்.

5 /7

பப்பாளியில் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

6 /7

பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது, இது புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது. சிலருக்கு, பாப்பைன் வயிற்று வலி, வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். பப்பாளியில் உள்ள சில கலவைகள் கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் பெண்கள், பப்பாளி பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

7 /7

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.