பொடுகுத் தொல்லையால் அவதியா, இதை மட்டும் பண்ணுங்கள்

தலைப்பொடுகு  என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். இந்த பொடுகு நமது தலையில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் மயிர்க்கால்கள் சுவாசிக்க முடியாமல் போய் விடும். இதனால் முடிகளின் வேர்கள் பலவீனம் அடைந்து உதிர ஆரம்பித்து விடுகிறது. எனவே பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் வழிகளை பின்பற்றுங்க...

1 /4

டீ இலை: சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாகும்.  இருக்கிறது. மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. டீ இலைகளை 6 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் தண்ணீரை வடிகட்டி குளிர்விக்கவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, டீ தண்ணீரை பயன்படுத்தினால் விரைவிலேயே பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

2 /4

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்: கற்பூரத்தையும் சிறிதளவு தேங்காய் எண்ணெயும் எடுத்து ஒன்றாக கலந்து ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தூங்க போவதற்கு முன் தினசரி தலையில் தேய்த்து வரவும்.

3 /4

கற்றாழை: சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். தலையில் கற்றாழை ஜெல் முழுவதுமாக படுவதை உறுதி செய்யும் விதமாக வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும். 

4 /4

வெங்காயச் சாறு: வெங்காயத்தை அரைத்து அதன் சாறைப் பிழிந்து வடிகட்டி தாராளமாக உங்கள் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட்டு பிறகு அலசி விடவும். வாரத்தில் 2 நாட்கள் இந்த ஜூஸை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.