வருடத்தில் 3 மாதங்கள் சூரியன் இல்லாத கிராமம், இருளை விரட்ட வந்த ‘செயற்கை சூரியன்’

விந்தை உலகம்: ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள் இந்த கிராமத்தில் சூரியனை காண முடியாது. இருள் சூழ்ந்திருக்கும். இதன் காரணமாக, அங்குள்ள மக்களிடையே பல நோய்கள் ஏற்படத் தொடங்கின. இருளில் இருந்து விடுபட, இந்த கிராம மக்கள் தங்களுக்கென ஒரு சூரியனை தயாரித்தனர்.

1 /6

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள விகனெல்லா கிராமம் எல்லா பக்கங்களிலும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது. குளிர் காலத்தில், சூரியனின் கதிர்கள் இங்கு வருவதில்லை. இதன் காரணமாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை சுமார் மூன்று மாதங்கள் இருட்டாக இருக்கும். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

2 /6

இதன் போது, ​​சூரியனின் கதிர்கள் வராததன்  மக்கள் பல நோய்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சூரிய ஒளி இல்லாததால், கிராம மக்கள் தூக்கமின்மை, மனநிலை பாதிப்பு, பலவீனம் ஆகியவற்றை எதிர் கொண்டதோடு,  குற்ற நடவடிக்கைகள் அதிகரித்ததால் அந்த பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. (புகைப்படம்: TROND STEGARUD/GAUSTATOPPEN BOOKING))

3 /6

இது சம்பந்தமாக, டிக்டாக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட, மருத்துவர் கரண் ராஜ் ஒரு கிராமம் சூரிய ஒளி இல்லாமல் அனைத்து பிரச்சனைகளுடனும் எப்படிப் போராடுகிறது என்று கூறினார். இதைத் தவிர்க்க, கிராம மக்கள் தங்களுக்கான  செயற்கை சூரியனை உருவாக்கினார்கள். (புகைப்படம்: Getty)

4 /6

விகனெல்லா கிராமம் 2006 ஆம் ஆண்டில் 100,000 யூரோக்கள் (அந்த நேரத்தில் சுமார் 87 மில்லியன்) செலவில் 8 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட திட எஃகு தாள்களைக் அமைத்தது. சூரிய ஒளி நேரடியாக இந்த எஃகு தாளை அடையும் வகையில் அமைக்கப்ப்ட்டது. இது கிராமத்தில் நல்ல வெளிச்சத்தை அளிக்கிறது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

5 /6

இந்த யோசனை கிராம மக்களுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது, இதன் மூலம் கிராமத்திற்கு இப்போது ஒரு நாளைக்கு ஆறு மணிநேர வெளிச்சம் கிடைக்கிறது. இந்த செயற்கை சூரியன் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. (புகைப்பட உபயம்: ராய்ட்டர்ஸ்)

6 /6

குளிர் மற்றும் இருள் காரணமாக நகரம் மூடப்பட்டபோது, ​​குளிர்காலத்தில் மக்கள் செயல்பட முடியாமல் முடங்கிய நிலையை பார்த்த போது, இதற்கு என்ன செய்யலாம் என யோசித்ததில் இந்த யோசனை வந்தது என்று மிடாலி கூறினார். டாக்டர் ராஜின் இந்த வீடியோ 1.9 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது மேலும் இந்த தகவல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. (புகைப்படம்: AP)