செவ்வாய் கிரகத்தின் ஆளுமையால் பொறுமைசாலி என்று பெயர் வாங்கும் துணிச்சல்காரரா நீங்கள்?

Sevvai Peyarchi June 2024 : துணிவை கொடுக்கக்கூடிய செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் நன்றாக இருப்பவர்கள்,சவாலான வேலைகளையும் துணிந்து செய்யக்கூடியவர்கள். செவ்வாய் கிரகத்தின் அடிப்படை அம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்... 

Mars Traits: தன்னம்பிக்கையின் உறைவிடம், துணிவு மற்றும் பொறுமைக்காரர் தலைமை தாங்கி செல்லும் தன்மைக்கு காரணகர்த்தாவான செவ்வாயின் குணநலன்கள்.. 

1 /9

சட்டென்று கோபம், அடிதடி, அதிரடி வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி செவ்வாய் கிரகம்

2 /9

தொழில் நுட்ப அறிவுக்கும் இயந்திரங்களை வடிவமைத்தல் மற்றும் இயந்திரங்களை ஞாபகமாக கையாளும் அறிவுக்கும் திறனுக்கும் ஆற்றலுக்கும் அதிபதி செவ்வாய்

3 /9

உழைப்பு, ஆற்றல், நிர்வாக திறன், சுதந்திர மனப்பான்மை போன்றா குணங்களைக் கொடுப்பவர் செவ்வாய் தான்... 

4 /9

ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1, 4, 9, 10 ம். வீடுகளில் அமர்ந்தும், தனது சுயசாரத்தில் அமர்ந்திருந்தாலும், ஒருவர் கோடீஸ்வரனாக உயர்வார் 

5 /9

கடின உழைப்பால் குறுகிய காலத்தில் உயர்ந்த அதிகாரப் பணியில் அமர வைக்கும் திறன் படைத்தவர் செவ்வாய்

6 /9

ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலோ செவ்வாய் அமர்ந்திருந்து, அதுவும் சுய சாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா சௌகரியங்களும் சுகங்களும் கிடைத்தாலும் விரோதிகளும் இருப்பார்கள்

7 /9

ஜாதகத்தில் செவ்வாய் 11ம் அதிபதியாகி இருந்தால் அவருடைய திசையில் ஜாதகருக்கு ராஜயோகங்கள் கிடைக்கும்

8 /9

தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று லக்னமாக இருந்து அதில் செவ்வாயும் இருந்து சுயசாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகர் ஆட்சியாளராக இருப்பார் அல்லது அதிகாரம் மிக்க பணியில்  இருப்பார்

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது