Best E Bikes in India: இன்று இந்தியாவில் இருக்கும் சில சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இக்னிடிரான் மோடோகார்ப்பின் சமீபத்தில் அறிமுகமான மின்சார பைக்கான சைபோர்க் ஜிடி-120 -யில் 4.68 kWH லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 125 கிமீ வேகத்தில் 180 கிமீ வரை செல்லும். புதிய சைபோர்க் ஜிடி-120 மூன்று டிரைவிங் முறைகளில் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு இந்த பைக் 0 முதல் 40 கிமீ தூரத்தை 2.5 வினாடிகளில் கடக்கும். ஜியோ லோகேட் / ஜியோ ஃபென்சிங், யூ.எஸ்.பி சார்ஜிங், ப்ளூடூத், கீலெஸ் இக்னிஷன் போன்ற பல சிறப்பான அம்சங்களை இந்த பைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 1.5 லட்சம் ரூபாய் இருக்கும்.
மின்சார வாகன உற்பத்தியாளரான டார்க் மோட்டார்ஸ் சமீபத்தில் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக் ரேஞ்சை அறிமுகப்படுத்தியது. இதில் டார்க் க்ராடோஸ் மற்றும் டார்க் க்ராடோஸ் ஆர் எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன. இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.02 லட்சமாகும். இது மானியத்துடன் இணைக்கப்பட்டுள்ள டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மோட்டார் சைக்கிளில் 48V சிஸ்டம் மின்னழுத்தத்துடன் IP67-மதிப்பிடப்பட்ட 4 Kwh லித்தியம்-அயன் பேட்டரி பேக் உள்ளது. இது மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக் 180 கிமீ ஐ.டி.சி வரம்பைக் கொண்டுள்ளது.
கோமகி ரேஞ்சர் க்ரூஸர் மின்சார பைக்கில் 4kW பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180-220 கிமீ வரை செல்ல முடியும். கார்னெட் ரெட், டீப் ப்ளூ மற்றும் ஜெட் பிளாக் ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,68,000 ஆகும். ரேஞ்சரை இயக்க, 4000 வாட் மோட்டார் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரிவோல்ட் ஆர்.வி 400-ஐ ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லும். இதன் பேட்டரி 4.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. ஆகும். இதில் இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. கிலோமீட்டர் கணக்கில் பார்த்தால், இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை 100 கிலோமீட்டருக்கு 9 ரூபாய் மட்டுமே என்று நிறுவனம் கூறுகிறது. இதன் விலை ரூ.90,799 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.