மகா சிவராத்திரி விழா மார்ச் 1, 2022 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும். சிவன் மற்றும் பார்வதி திருமணம் மகாசிவராத்திரி நாளில் நடந்ததாக நம்பப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவன் கோயிலுக்குச் சென்று ஜலாபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்வார்கள். இதனுடன், சிவலிங்கத்தின் மீது விருப்பங்களை நிறைவேற்ற பல விஷயங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும். எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற பொருட்களை வைத்தே வழிபடுங்கள். இங்கே உங்களுக்கு சிவபெருமானின் அன்பை பெற்றுத்தரும் பொருட்கள் எவை என்பதை பார்க்கலாம்.
சிவபுராணத்தின் படி ஈசனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதோ அல்லது வைத்து வழிபடுவதோ சிவபெருமானை குளிர்விக்கும் அதோடு தூய்மையையும் பரப்பும்.
சிவபெருமானை நெய்யை வைத்து வழிபடும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் சிவனுக்கு சுத்தமான பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வைத்து மட்டுமே வழிபடவேண்டும்.
இது சிவவழிபாட்டிற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் மலர்களை காட்டிலும் இந்த இலைகளே ஈசனுக்கு மிகவும் பிடித்தது.
குங்கமப்பூ என்பது மக்களால் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. ஆனால் அது சிவனுக்கு மிகவும் பிடித்த பொருள் என்பது பலரும் அறியாத ஒன்று. குங்குமப்பூவை கொண்டு சிவனை வழிபடுவது உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும்.
சிவபெருமானுக்கு வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும். அதேபோல் சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபடுட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம்.