Glucoma Diet: கண் அழுத்த நோய் எனப்படும் குளுக்கோமா என்ற நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும்.
தீவிரமான கண் நிலையான குளுக்கோமா ஏற்பட்டால், ஒருவரின் விழியின் உட்புறம் இருந்து அழுத்தம் ஏற்படும். இது பார்வை நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையை தவிர்க்க இந்த உணவுகள் உதவும்.
பார்வை நரம்புக்கு சேதம் விளைவிக்கும் நிலைகளை குளுக்கோமா என்று சொல்கிரோம். கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ள பார்வை நரம்புகள், கண்ணிலிருந்து மூளைக்கு காட்சி சமிக்ஞைகளை அனுப்புகிறது, இது காட்சிப்படுத்தலுக்கு உதவுகிறது. பார்வை நரம்புக்கு ஏற்படும் பாதிப்பு, இறுதியில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே குளுக்கோமா என்ற இந்த நோயைத் தவிர்க்க உதவும் உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
கேரட் கண்களுக்கு நல்லது மற்றும் குளுக்கோமா அபாயத்தைக் குறைக்கும். பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன, இது விழித்திரை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
செலரியில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. குளுக்கோமாவின் அபாயத்தைக் குறைக்க உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். இது கண்பார்வையை பராமரிக்க உதவுகிறது
எலுமிச்சையில் பிரக்டோஸ், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின்கள் பி1, பி2, பி6, ஃபோலேட் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் உள்ளன. மிக முக்கியமாக, அவற்றில் வைட்டமின் சி உள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கிளைக்கோமா அபாயத்தைக் குறைக்கிறது.
பால் பொருட்கள் கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது. அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் கண் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை குளுக்கோமாவின் அபாயத்தைக் குறைக்கவும், கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. கிளைகோமாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒமேகா-3 நன்மை பயக்கும்
முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் கலவைகள் உள்ளன, அவை கிளைகோமா அல்லது குளூக்கோமா நோயாளிகளுக்கு நல்லது. கூடுதலாக, முட்டையில் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன.