இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 5 தென்னிந்திய நடிகைகள்! முதல் இடம் யாருக்கு?

Top 5 South Indian Actress : தென்னிந்த நடிகைகள் சிலர், இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் இருப்பதாலேயே அதிகம் சம்பாதிக்கின்றனர். அப்படி கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகைகள் யார் தெரியுமா?

Top 5 South Indian Actress :  நடிகைகளை பொறுத்தவரை வாங்கும் சம்பளத்தை விட இன்ஸ்டாகிராமில் இருக்கும் followersகளே அவர்களின் மவுசை தீர்மானிக்கும்.  அப்படி இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள டாப் 5 தென்னிந்திய நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

 

1 /8

பல லட்சம் பேர் உபயோகிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம், பலர் கோடி கோடியாக சம்பாதித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக சில தென்னிந்திய நடிகைகள் படங்களை விட இதில் விளம்பரம் செய்வதற்கு அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

2 /8

தென்னிந்திய நடிகைகள் பலர், இப்போது பாலிவுட்டிலும் ஜொலிக்க ஆரம்பித்து விட்டனர். நயன்தாரா தொடங்கி, ராஷ்மிகா வரை பலருக்கு இந்தி பட வாய்ப்புகள் பிரகாசமாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையில், எந்தெந்த தென்னிந்திய நடிகைகள் இன்ஸ்டாவில் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்பதை பார்ப்போமா?

3 /8

இந்த லிஸ்டில்  ஐந்தாவது இடத்தில் இருப்பது நடிகை ஸ்ருதிஹாசன் தான். கமல்ஹாசனின் மகளான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு சொந்த காரணத்திற்காக சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் மீண்டும் தற்போது சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிஸியாக நடித்த வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 24.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். அடிக்கடி instagramல் வீடியோ,  போட்டோக்களை பதிவிட்டு வரும் சுருதிஹாசனை பின்தொடர்ந்து வரும் அவரது ரசிகர்கள் விரைவில் தமிழ் படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றனர்.  

4 /8

4 வது இடத்தில் பூஜா ஹெக்டே உள்ளார். இவரை பொருத்தவரை தமிழில் இரண்டு படங்களில் தான் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்த வருகிறார். விஜய்யுடன் இவர் நடித்த பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதேபோல தமிழில் இவரது முதல் படமான முகமூடியும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு தமிழில் நடிக்க ஆர்வம் காட்டாத பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். இவரை இன்ஸ்டாகிராமில் 27 மில்லியன் மக்கள் பாலோ செய்கிறார்கள்.  

5 /8

மூன்றாவது இடத்தை நடிகை காஜல் அகர்வால் பிடித்துள்ளார். இவரை 27.1 மில்லியன் மக்கள் பாலோ செய்கிறார்கள். நம்பர் ஒன் நடிகையாக கொடிகட்டி வளம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் இந்தியன் 2 படத்தில் இவர் நடித்திருப்பதால் அந்த படம் வெளியானால் மீண்டும் தனக்கு நல்ல பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என ஒரு ரவுண்ட் வந்த காஜல் அகர்வாலுக்கு மீண்டும் நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற ஆவலுடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்  

6 /8

 தன்னுடைய அனைத்து விஷயங்களையும் instagram மூலம் ரசிகர்களுக்கு சொல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் தான் நடிகை சமந்தா. இவர் தான் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தன்னுடைய விவாகரத்து செய்தி என்றாலும் சரி, தனது உடல்நல பிரச்சனை என்றாலும் சரி படப்பிடிப்பு குறித்த தகவல்கள் என்றாலும் சரி தனது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு சொல்லிவிடுவார்.  நடிகை சமந்தாவை 35.3 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்கிறார்கள்.  படங்களில் தற்போது நடிக்காமல் தனது உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்தி வரும் சமந்தா, instagramல் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அதுவே இவரை ரசிகர்கள் மறக்காமல் இருக்க காரணம்.  

7 /8

 நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது ராஷ்மிகா மந்தனா தான். 43.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான அனிமல் படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. தமிழ், தெலுங்கு என கலக்கி வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்யுடன் இவர் நடித்த வாரிசு படமும் இவருக்கு நல்ல பெயரை தமிழ் ரசிகர்களிடம் பெற்று தந்தது. நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா எப்போதுமே தனது ரசிகர்களை ஏமாற்றாமல் க்யூட்டாக போட்டோ ஷூட்களை நடத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  

8 /8

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக கருதப்படும் நயன்தாராவுக்கு 8.4 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். அவர் சில மாதங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதால் அவரது பாலோயர்ஸ்கள் குறைவாகவே உள்ளனர். அதேபோல நடிகை திரிஷாவுக்கும் 6.8 மில்லியன் ஃபாலோர்ஸ்களே உள்ளனர். அவரும் பெரிதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையோ வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.