சில காய்கறிகளையும், தானியங்களையும் சமைப்பதால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். சில காய்கறிகளையும் தானியங்களையும் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
முளை கட்டிய பயறுகளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முளை கட்டிய பயறு வகைகள் அதிக சத்து நிறைந்தவை. இவற்றை சமைக்காமல் சாப்பிடுவது அதிக பலன் தரும்.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கலாம். வெங்காயத்தை சாலட்களில் சமைக்காமல் சேர்த்து சாப்பிடலாம்.
ப்ரோக்கோலி சாலட்டாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவுகளில் ஒன்றாகும். ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
பீட்ரூட் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு காய்கறி. பீட்ரூட்டை உணவில் ஜூஸாக அல்லது சாலட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
தக்காளியில் உள்ள லைகோபீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் நல்லது. சமைக்காமல் சாப்பிடும் போது உடலுக்கு சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.