Tips to Reduce High Cholesterol: உடலில் உள்ள பெரும்பாலான கொலஸ்ட்ரால் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. கொழுப்பின் மோசமான மற்றும் ஆபத்தான வடிவம் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) என்று அழைக்கப்படுகிறது. எல்டிஎல் கொழுப்பு உங்கள் தமனிகளில் குவிந்து, கொழுப்பு, மெழுகு படிவுகளான பிளேக்குகளை உருவாக்கலாம்.
மது அருந்துதல், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் அதிக செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை அதிக கொழுப்பு அளவுகளுக்கு வழிவகுக்கும். இது உடல் பருமன் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காய்கறிகளை சமைக்கும்போது மஞ்சளை தினமும் உபயோகிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது தவிர இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் சேர்த்து பருகலாம். இதுவும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீரைக் குடிப்பதால் அதிக கொலஸ்ட்ரால் குறைந்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதற்கு கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஆற வைக்கவும். காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இவ்வாறு செய்வதால் நன்மைகள் உண்டாகும்.
ஆப்பிளில் பெக்டின் சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலைக் குறைக்க இது சிறந்த தீர்வாகும். பெக்டின் என்பது ஒரு வகையான நார்ச்சத்து ஆகும். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்களும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
ஆளிவிதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனுடன், அவை தமனிகளின் வீக்கத்தையும் குறைக்கின்றன. ஆளி விதையை முழுவதுமாகவோ அல்லது அரைத்தோ பாலுடன் பொடியாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் 30 கிராம் ஆளி விதையை உட்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான இதயத்தையும் நல்ல கொலஸ்ட்ராலையும் ஊக்குவிக்கிறது.
க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கப் க்ரீன் டீ கண்டிப்பாக பருக வேண்டும். இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)