கிரெடிட் கார்ட் வைத்துள்ளீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ்!

கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக தெரியலாம், ஆனால் அதில் நாம் செய்யும் சிறு தவறான விஷயங்களால் நமக்கு கடன் சுமை அதிகரித்துவிடும்.

 

1 /5

கிரெடிட் கார்டு மூலம் கடனாக பெற்ற தொகையை நிலுவையில் வைக்காமல் உரிய கால அவகாசத்திற்குள் நீங்கள் செலுத்திவிட வேண்டும், இது உங்கள் நன்மதிப்பை பிரதிபலிப்பதாக அமையும்.  தாமதாக பணம் செலுத்தும்போது உங்கள் சிபில் ஸ்கோர் பாதிப்படையும்.  

2 /5

கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுப்பது தவறான ஒன்று, டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதே சிறந்தது. கார்டு மூலம் பணம் பெறும்போது நிறுவனம் உங்களிடம் அதிக வட்டியை வசூலிக்கும்.  

3 /5

உங்கள் கார்டின் வரம்புக்குள் ஷாப்பிங் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், தவணை முறையில் பொருட்கள் வாங்குவதற்கு எளிதாக இருக்கிறது என்பதற்காக கடன் சுமையை அதிகரித்து கொள்ளாதீர்கள்.  

4 /5

அதிகமாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் வாங்குவது ஆபத்தானது, 30% கடன் விகிதம் நல்லவிதமாக பார்க்கப்படுகிறது.  அதற்கு மேல் வாங்குவது கடன் சுமையை உருவாக்கும்.  கிரெடிட் கார்டு பயன்பட்டை  மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம்.  

5 /5

கிரெடிட் கார்டு உங்களுக்கு எப்பொழுது அவசியமாக தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டுமே அதற்கு விண்ணப்பித்து வாங்க முயலுங்கள்.  கிரெடிட் கார்டை தேவையில்லாமல் பயன்படுத்துவது சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.