Bhudh-Adithya Yogam: அவ்வப்போது கிரகங்களில் நடக்கும் மாற்றங்களும், அவற்றின் இடம் பெயர்தலும், நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வழியிலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைகின்றன. அப்படி ஒரு மாற்றம் தற்போதும் நடந்துள்ளது. வேத ஜோதிட சாஸ்திரப்படி புதன் தனுசு ராசியில் டிசம்பர் 10 ஆம் தேதி பிரவேசித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி, அதாவடு இன்று, கிரகங்களின் ராஜாவான சூரியனும் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனும் புதனும் இணைந்து வருவதால் புத-ஆதித்ய யோகம் உண்டாகும். ஜோதிடத்தில் புத-ஆதித்ய யோகம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த புத ஆதித்ய யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கப் போகிறது. எந்தெந்த ராசியில் சூரியன்-புதனின் அதிகப்படியான அதிர்ஷ்டம் இருக்கும் என இங்கே காணலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு புத-ஆதித்ய யோகம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் கிட்டத்தட்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் செய்யும் பணி பாராட்டப்படும். மேலும் குடும்பத்தின் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.
புத ஆதித்ய யோகம் மிதுன ராசிக்கார்ரகளு மிக நல்ல பலன்களைத் தரும். முதலீடு அல்லது கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் ஆனந்தமான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புகள் பிறக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் சாதகமாக அமையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வருமானம் உருவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவீர்கள். கல்வியில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் பணி பாராட்டப்படும். வியாபாரத்திலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் அனுகூலமாக அமையப் போகிறது. பொருளாதார நிலை மேம்படும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வேலை மாற்றம் ஏற்படும். அது பல வெற்றிகளைக் கொண்டு வரும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)