Ayurveda Tips For Diabetes: நீரிழிவு மருந்துகள் மற்றும் சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் தவிர, ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் சில பயனுள்ள மூலிகைகள் உள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
குடுச்சி/கிலோய்: சுவையில் கசப்பாக இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி, சர்க்கரை அளவு, இருமல்/சளி, கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றுக்கு சிறந்தது.
நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்: நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
திரிகடுகு: திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். எனவே இது உங்களின் சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவும்.
வேம்பு மற்றும் மதுனாதினி ஆகியவை கசப்பானவை ஆனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
அஸ்வகந்தா மன அழுத்தம், சோர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலை, முருங்கைக்காய், இலவங்கப்பட்டை, வெந்தயம், அர்ஜுனா போன்றவை நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும் சில மூலிகைகள் ஆகும்.