உடலில் சக்திபெற மற்றும் வலுவாக இருக்க வைட்டமின் B12 அவசியம். எனவே எந்த சைவ உணவுகளில் அதிக வைட்டமின் B12 நிறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய ஒருவகை வைட்டமின் ஆகும், இது அதிகமாக அசைவ உணவுகளில் உள்ளது.
நம் உடல் வைட்டமின் B12ஐ தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே அதனை சில உணவுகளின் மூலம் எடுத்து கொள்ள வேண்டும். அசைவ உணவை தவிர, சில சைவ உணவுகளிலும் வைட்டமின் B12 நிறைந்துள்ளது.
தயிரில் அதிக அளவு வைட்டமின் B12 உள்ளது. ஒரு கப் தயிரில் கிட்டத்தட்ட 28% வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. எனவே சைவ உணவு பிரியர்கள் மறக்காமல் தயிரை சேர்த்து கொள்ளுங்கள்.
பாலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. மேலும் புரதம், கால்சியம் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளது. பால் தவிர, பன்னீர் போன்ற உணவுகளையும் எடுத்து கொள்ளலாம்.
கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் இரும்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் அதிகம் உள்ளது.
சோயாவில் வைட்டமின் பி12 சத்துக்கள் இயற்கையாகவே உள்ளது. இவற்றை தினசரி உணவில் எடுத்து கொண்டால் நல்ல சத்து கிடைக்கும்.