இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது... 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட இந்த ஆடம்பர காரின் பெயர் அசுரா என்று கூறப்படுகிறது.
Tata Azura: டாடா நிறுவனம் அண்மையில் அஸுரா என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்துள்ளது. எனவே டாடா அசுரா என்ற பெயரில் புதிய கார் வரவுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது...
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் 'அசுரா' என்ற பெயருக்கான வர்த்தக முத்திரையை தாக்கல் செய்தது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் கர்வ்வ் கூபே எஸ்யூவிக்கு இந்த பெயரைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
டாடாவின் தயாரிப்புக்கு அசுரா என்று பெயரிடப்படும். ஆனால், சரக்கு வாகனத்திற்கு இந்த பெயர் சூட்டப்படுமா என்பது தெரியவில்லை
ஊடக அறிக்கைகளின்படி, Tata Curvv SUV பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுடன் மின்சார வகைகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த SUV அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
Curvv கூபே கான்செப்ட் SUVக்கு அசுரா என்று பெயரிடப்படலாம். இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் இது காட்சிப்படுத்தப்பட்டது. அதன் சோதனை தொடங்கியுள்ளது.
அசுரா என்ற பெயரில் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டால், இது இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் மிட்-எஸ்யூவி ஆகியவற்றுடன் போட்டியிடும
இதுவரை வெளிவந்துள்ள கசிந்த படங்களைப் பார்க்கும்போது, டாடாவின் Curvv இன் வடிவமைப்பு Tata Nexon facelift மற்றும் Nexon.ev ஃபேஸ்லிஃப்ட் போன்றே இருக்கும் என்று காட்டுகிறது.
டாடாவின் வரவிருக்கும் SUV Curvv ஆனது 360 டிகிரி கேமரா, டூயல் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மல்டி ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது தவிர, காரில் சன்ரூஃப் மற்றும் டச் ஸ்கிரீன் தகவல் அமைப்பு வழங்கப்படலாம்.