Tamil Actor Abbas Family Photos: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அப்பாஸ், தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கிறார். இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர், அப்பாஸ். இவர் மீது அன்றைய இளம் பெண்கள் பலர் க்ரஷ் வைத்திருந்தனர். பார்த்தவுடன் ‘அடடா..என்ன அழகு..’ என கூற வைக்கும் படி பிறரை ஈர்த்துவிடுவார்.
அப்பாஸ், 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சில படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்திருக்கிறார். அந்த படங்கள் அனைத்துமே ஹிட் அடித்துள்ளன. இவர், முதன் முதலாக தமிழில் நடித்த படம், காதல் தேசம். 2015ஆம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட இவர், தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார்.
அப்பாஸ் நடிப்பில் உருவான காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, பம்மல் கே சம்பந்தம், படையப்பா உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன.
2014ஆம் ஆண்டில் கடைசியாக ராமானுஜன் படத்தில் நடித்த இவர், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது, நியூசிலாந்தில் ஊக்கமளிக்கும் பேச்சாளராக உள்ளார். இவரது குடும்பத்தினரும் இவருடன்தான் உள்ளனர்.
அப்பாஸிற்கும், எரும் அலி என்பவருக்கும் 1997ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடிக்கு, தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சமீபத்தில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் அப்பாஸ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இருக்கும் அப்பாஸின் மகன், அச்சு அசலாக அவரைப்போலவே உள்ளார். இவரது பெயர், அயமான் அலி.
அப்பாஸ் குடும்பத்தின் அப்போதைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒன்றாக வைத்து ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.