Virat Kohli against Pakistan in T20 World Cup: இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) இடையேயான போட்டியில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் விராட் கோலி மீது அதிகமாக இருக்கும். விராட் கோலியின் தலைமையில் கடைசியாக ஒரு முறை டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானதாக இருக்கும். பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் இந்த போட்டிகளில் கேப்டன் விராட் கோலி பெரிய ஸ்கோரை எடுக்க தவறிவிட்டார்.
இந்த சீசனின் ஐபிஎல் போட்டியும் விராட் கோலிக்கு சிறப்பானதாக இல்லை. கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகும் அழுத்தமும் ஒரு புறம் உள்ளது. அவரது பேட்டிங்கை அவர் மேம்படுத்த வேண்டிய சவாலும் உள்ளது. ஒரு கேப்டனாக கடைசி உலகக் கோப்பையை ஆடும் விராட் கோலி தனது முடிவுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரது பேட்டிங் முன்பு போல் கூர்மையாக இல்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் சாதனை பிரமாண்டமானதாக உள்ளது. (புகைப்படம்: பிடிஐ )
டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி எப்போதும் அவுட் ஆனதில்லை. அவர் ஒவ்வொரு முறையும் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். எந்த ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளராலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடிந்ததில்லை. (புகைப்படம்: பிடிஐ)
2012 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி 61 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து 17வது ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தார். (புகைப்படம்: பிடிஐ)
2014 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது, விராட் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். (புகைப்படம்: பிடிஐ)
2016 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, விராட் கோலி 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். மேலும் 13 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. (புகைப்படம்: பிடிஐ)