IND vs PAK: பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்திய அணி! தீபாவளி சரவெடி அதிரடி வெற்றி

IND vs PAK: இந்தியர்களுக்கு தீபாவளி பரிசாக இந்திய கிரிக்கெட் அணி கொடுத்த வெற்றியால் இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக மாறிவிட்டது.   

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டம், தீபாவளி பரிசாக அமைந்தது.

மேலும் படிக்க | IND vs PAK : பரபரப்பான போட்டியில் வென்றது இந்தியா - பட்டையை கிளப்பிய கோலி

1 /8

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது  

2 /8

டி20 உலகக்கோப்பையில் 6 முறை பாகிஸ்தானுடன் மோதியுள்ள இந்தியா, அதில் ஐந்தில் வெற்றி பெற்றது. 

3 /8

கடந்த உலகக்கோப்பையில் அடைந்த படுதோல்விக்கு இந்தியா பழிதீர்த்தது

4 /8

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் இஃப்திகார் அகமது, ஷான் மசூத் ஆகியோர் அரைசதம் அடித்து மிரட்டினர்

5 /8

இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

6 /8

விராட் கோலி அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்

7 /8

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது

8 /8

கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களில் அவுட்டானார். அடுத்த இரண்டு பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கோலி சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து, தன்னை நிரூபித்தார்