Ration Shop In Tamil Nadu: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை விரைவில் மைக்ரோ ஏடிஎம்களாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
Ration Shop Micro ATMs: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதுக்குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொது வினியோகத் திட்டப் பொருட்களை வினியோகம் செய்வதும், பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை விரைவில் மைக்ரோ ஏடிஎம்களாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
தற்போது கூட்டுறவுத் துறை வாயிலாக செயல்படும் 3500 கூட்டுறவு சங்கங்களில் பணம் செலுத்தும் நடைமுறைகள் இருந்து வருகின்றன. சில கூட்டுறவு சங்கங்களில் பணம் எடுக்கும் நடைமுறைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கூட்டுறவுத் துறைகள் சார்பில் இயங்கும் 34567 ரேஷன் கடைகளிலும் விரைவில் மைக்ரோ ஏடிஎம் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஆதார் அட்டை வாயிலாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ரேஷன் கடை மைக்ரோ ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 20000 வரை எடுத்துக்கொள்ளும் வசதி நடைமுறைப்படுத்தப்படும் எனத் தகவல்.
இதற்காக ரேஷன் கடை ஊழியர்களிடம் ரொக்கப்பணம் முன்பே வழங்கப்பட்டு விடும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.