E-Scooters: அற்புதமான மைலேஜ் தரும் எலக்ட்சிக் ஸ்கூட்டர்கள்! விலையும் ஒரு லட்சம் ரூபாய்க்குள் தான்!

Electric scooter Upto 1 Lakh Rupees: பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் வாங்க வேண்டும் என்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒத்து வராது என்று நினைக்க வேண்டாம். ஒரு லட்சம் ரூபாய்க்குள் அருமையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன  

ஓலா, கைனெடிக் கிரீன், ஏசர், லூனா ஒகினாவா என பல மாடல்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன  

1 /7

 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்... குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் இரு சககர வாகனங்கள் 

2 /7

லூனாவின் மின்சார மாடலை தயாரிக்கும் கைனெடிக் நிறுவனமும் குறைந்த விலையில் E பைக்கைக் கொண்டு வந்துள்ளது. ரூ.71,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த இ-பைக், ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கும்.

3 /7

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2 பேட்டரி விருப்பங்களில் கிடைக்கும்: 2 kWh/3 kWh. 2 kWh பேட்டரி மாடல் முழு சார்ஜில் 95 கிலோமீட்டர் வரை செல்லும் மற்றும் 3kWh மாடல் 143 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் முதல் தொடங்குகிறது.  

4 /7

55,555 ரூபாய் விலையில் யூலு அறிமுகப்படுத்தியிருக்கும் மின்சார வாகனம் இது. இரு சக்கர மின்சார  வாகனங்களில் விலை மலிவாய் கொடுக்கும் Yulu-wynn நிறுவனத்தின் தயாரிப்பு இது

5 /7

AMO Electric Jaunty-3W ஒரு மின்சார ஸ்கூட்டரின் இந்திய விலை 78,819 ரூபாய் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிமீ  வரை செல்லும் வாகனம் இது. துரிதமாக சார்ஜிங் ஆகும் வாகனம் இது.  முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் உள்ளன. 2 அழகான வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

6 /7

ஏசர் நிறுவனமும் மின்சார வாகனப் பிரிவில் நுழைந்துள்ளது. 75 கிமீ வேகத்தில் வரும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.99,999. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் செல்லும்

7 /7

Bounce Infinity E1+ இன் விலைஆரம்ப விலை ரூ. 94,071