Body Heat Foods : உடல் சூடு அதிகமாக பலருக்கும் பலவித காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை தணிப்பது என்னவோ எளிமைதான். அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
Body Heat Foods : உடல் சூடாவது என்பது அனைவருக்கும் ஏற்படும் இயற்கையான பாதிப்புகளுள் ஒன்று. வெயில் காரணமாக, மாசு காரணமாக அல்லது இயற்கையாகவே ஒருவரின் உடல் அமைப்பு காரணமாகவே கூட உடல் சூடு அதிகமாகாலாம். இதை தணிக்க, சில நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. இவை, பாடி ஹீட்டை தணிப்பது மட்டுமன்றி, உடலுக்கு நன்மையும் அளிக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
உடல் சூடு: உடல் சூட்டை தணிக்கும் உணவுகள். இதை, தவிர்க்க சில உணவுகளை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?
கரும்பு ஜூஸ்: கரும்பு ஜூஸ், இயற்கையாக உடல் சூட்டை அதிகரிக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆனால், இதில் ஐஸ் க்யூப்ஸ் மற்றும் எலுமிச்சை சாறினை கலந்து குடித்தால் உடல் சூடு குறையும் என பரவலாக நம்பப்படுகிறது.
வெங்காயம்: உடலை குளுமையாக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் ஆண்டி அலர்ஜிக் தன்மைகளினால் ஹீட் ஸ்ட்ரோக் வரும் அபாயத்தை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் ஃபைபர் சத்துகள் அதிகளவில் இருக்கிறது. இது, உடல் சூட்டை தணிக்க உதவுவதோடு மலச்சிக்கலையும் போக்குமாம்.
இளநீர்: உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகளுள் ஒன்று, இளநீர். வெயில் காலத்தில் இதை குடிப்பதனால் உடல் குளுமையாகும்.
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களான, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை சாப்பிடும் போது உடல் சூடு தணிந்து குளுமையாகும் என கூறப்படுகிறது.
சிவரிக்கீரை: சிவரிக்கீரையை ஜூஸாக செய்து குடிக்கலாம். இதனால் உடல் சூடு நீங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மோர்: சம்மருக்கு சூப்பராக உதவும் பானங்களுள் ஒன்று, மோர். இதனை வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாகும் நேரத்தில் குடிக்கலாம். (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)