காலை உணவுக்கு சூப்பர் உணவுகள்! நாள் முழுவதும் சுறுப்பாக வைக்கும் Super Foods

Super Foods for Breakfast: காலை உணவு நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு, அன்றைய தினத்தின் நமது சுறுசுறுப்புக்கு ஆதாரமாக இருக்கும். 

பரபரப்பான நமது வாழ்க்கை முறையால், காலையில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரியவில்லை. இந்த மூன்று பொருட்களால் செய்த உணவு காலை உணவுக்கு உகந்தது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஆகச் சிறந்த ஐந்து பழங்கள்

1 /4

பலர் காலையிலேயே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார்கள். இவை ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் சிலவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இவை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2 /4

வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்: காலையில் ஆரோக்கியமான காலை உணவை விரும்பினால், வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்துக் கொள்ளவும். அதில் சியா விதைகள், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும். ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பிரெட் டோஸ்ட் ரெடி

3 /4

கொண்டைக்கடலை புரதத்தின் நல்ல மூலமாகும், எனவே ஆரோக்கியமான காலை உணவில் கடலை சேர்த்துக் கொள்வது நல்லது. கடலை மாவில் பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், உளுத்தம் மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கெட்டியான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மாவில் செய்யப்படும் தோசை உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

4 /4

புரோட்டீன் ஷேக் எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும். 25 கிராம் புரத தூள், பால், நறுக்க்கிய பழங்கள், பாதாம் மற்றும் பிஸ்தாவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆளி விதைகள் அல்லது சியா விதைகளையும் சேர்த்தினால் மேலும் அதிக ஆரோக்கியமான நாளுக்கு உத்தரவாதம் கொடுக்கலாம். பாலில் புரத தூளை கலக்கவும். அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களை கலக்கினால் உங்கள் பவர் பூஸ்டர் தயாராக உள்ளது. (குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)