சுக்கிரன் பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி தான்..!

Venus Transit 2024: ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மே 19 அன்று சுக்கிரன் தனது ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: ஆடம்பரம் வசதி வாய்ப்பை அள்ளித் தரும் சுக்கிரனின் ரிஷப ராசி சஞ்சாரத்தால், அனைத்து ராசிகளும் பயனமடைவார்கள் என்றாலும், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் அபரிமிதமாக இருக்கும்.

1 /7

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் இன்பம், ஆடம்பர மற்றும் செல்வம் ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறது. வரும் 2024 மே 19ம் தேதி அன்று, சுக்கிரன் கிரகம் அதன் ராசியான ரிஷப ராசியில் பெயர்ச்சியாகிறது. ஜூன் 12 வரை ரிஷப ராசியில் சுக்கிரன் நீடிக்கப் போகிறார். இந்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பலன் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /7

ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் நிலையில், ரிஷப ராசிக்காரர்கள் பெரும் பலன் பெறலாம். இவர்கள், வேலையில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். இதனுடன், இந்த காலகட்டத்தில் பண வரவின் பலனைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு இருக்கும். வாழ்க்கை துணையுடன் சிறந்த முறையில், நேரத்தை செலவிடுவார்கள்.

3 /7

மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் மிகவும் சாதகமான பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும். கை வைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம். இதுவரை கைக்கு வராத பணத்தை மீட்டெடுக்க முடியும். இதனுடன் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

4 /7

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அனைத்து வேலையும் நிறைவேறும். இதனுடன், இந்த காலகட்டத்தில் இவர்கள் நிதி நன்மைகளையும் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தங்கள் தேடலில் வெற்றி பெறலாம்

5 /7

சிம்ம ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் முழுப் பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றம் அடையலாம். இதன் மூலம் வேலையிலும், வியாபாரத்திலும் லாபம் அடைவீர்கள். இந்த நேரத்தில் குடுமப்த்தினருடன் ஆன்மீக பயணம் செல்லலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

6 /7

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் திருமண உறவு கை கூடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புகள் இருக்கும். வேலையில், தொழிலில் ஏற்றம் உண்டாகும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெறலாம். இதனுடன் முதலீடு செய்வதும் பலனளிக்கும்.  

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.