விருச்சிகத்தில் சூரியன்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சூரியன், பொற்காலம் ஆரம்பம்

Sun Transit in Scorpio: கிரகங்களின் ராஜாவான சூரியன், வெற்றி, மரியாதை, தந்தை பாசம், சகோதர பாசம், ஆன்மா, தைரியம் மற்றும் துணிவு ஆகியவற்றின் காரணியாக உள்ளது. சூரியன் தனது ராசியை மாற்றும்போதும், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் 16ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியடைந்து விருச்சிக ராசியில் பிரவேசித்தார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது. 

1 /4

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். அத்தகைய சூழ்நிலையில், சூரியனின் ராசி மாற்றத்தின் அதிகபட்ச விளைவு இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். விருச்சிக ராசியில் பிரவேசித்த சூரியன் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிப்பார். சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

2 /4

சூரியனின் ராசி மாற்றம் விருச்சிக ராசியில் நடந்திருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பலன்கள் அதிகமாக இருக்கும். விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரம் இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றியைத் தரும். பணி இடத்திலும் குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். பணப் பலன்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

3 /4

சூரியனின் ராசி மாற்றம் கும்ப ராசியினருக்கும் சுபமாக அமையும். பண வரவு அனுகூலமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

4 /4

மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். இந்த காலத்தில் துவங்கப்படும் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் / மனைவி குழந்தைகள் இடையே அன்பு அதிகரிக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)